Thursday, February 2, 2012

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் 4

ஆதிக்கவெறி  துணிவு ஆகுமா? - சமீரா மீரான்
2012 , பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்தவை பெரும் விவாதத்துக்கும்  விமர்சனத்துக்கும்  உள்ளாயின. விஜயகாந்த் கை நீட்டி பேசிய விதத்தைதான் பலரும் குறை கூறினார்களே தவிர, ஜெயலலிதா பேசிய விதம் சரியா?  என்று வெகு சிலர்தான் வினா எழுப்பினர். விஜய காந்தை விட நீண்ட அரசியல் அனுபவம் உள்ள  ஜெயலலிதா அன்று பேசியது  அரசியல்  நாகரித்துக்கு உகந்ததாக இல்லை. முகநூலில் பதிவர் ஒருவர் எழுதியிருந்தது நம்மை வெகுவாக சிந்திக்க வைத்தது. 
‘மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மாமேதை மார்க்ஸின் தத்துவமே அதிர்ச்சிக்குள்ளாகும், ஜெ.வின் அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்து!
தன்னை அரசியலுக்குக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரைசெயல்படமுடியாத முதல்வர்என்று பிரதமர் ராஜீவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் ஜெ.
நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட .தி.மு. தலைவர்களைஉதிர்ந்த ரோமம்என்று வர்ணித்து தனது தலைமைப் பண்பைக் காட்டினார்.
இரவு 10 மணிக்குத் தொடர்புகொள்ளமுடியவில்லை என்பதால், ‘இவரெல்லாம் பிரதமரா?’ என்று ராஜீவ்காந்தியை விமர்சித்தார்.
எம்.ஜி.ஆருக்குமோரில் விஷம் வைத்துக் கொடுத்தார்என்று ஜானகி அம்மாள் மீது குற்றம்சாட்டினார்.
தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகளில் நடந்த கொள்ளைகளுக்கு பிரதமர் நரசிம்மராவ்தான் தூண்டுதல் என்று குற்றம்சாட்டினார்.
ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம்தவறாக நடந்து கொள்ள முயன்றார்என்று பழிசுமத்தினார்.
அத்வானிக்குசெலக்டிவ் அம்னீஷியாநோய் என்றார்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையத்தைபல் இல்லாத ஆணையம்என்றார்.
சோனியா காந்தியைபதிபக்தி இல்லாதவர்என்றார்.
காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தைகாலி டப்பாஎன்றார்.
பா.. நிறுவனர் ராமதாஸைபயந்தாங்கொள்ளிஎன்றார்.
கம்யூனிஸ்ட்டுகளைஉண்டியல் குலுக்குபவர்கள்என்றும், மேற்குவங்கத்தில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடி செய்ததால்தான் தொடர்ந்து வெற்றிபெற்றார்கள் என்றும் சொன்னார்.
விஜயகாந்த்தை ஏற்கனவேகுடிகாரர்என்ற பொருள்பட வர்ணித்தவர் இப்போது மீண்டும், ‘தகுதி இல்லாதவர்’, ‘கீழ்த்தரமானவர்என்றும் விமர்சித்துள்ளார்.
தனக்கும் தன் கட்சிக்கும் துணை நின்ற அரசியல் தலைவர்களை விமர்சிப்பதிலிருந்து ஜெ. இதுவரை மாறவில்லை. மாற்றத்தை எதிர்பார்த்து அவருடன் கூட்டணி சேர்ந்தவர்களும் வாக்களித்தவர்களும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களான கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் . அன்பழகன் போன்றாரைப் பற்றி ஜெயலலிதா சொன்னவற்றை தன் பட்டியலில் இந்தப் பதிவர் சேர்க்கவில்லை. அதையும் சேர்த்தால் ஜெயலலிதாவின் அடாவடி அரசியல் குறித்து ஒரு பெரிய புத்தகமே தயாரித்து விடலாம்.
 நியாயங்களை காயப்படுத்தாதே !  அந்த காயங்களை நியாயப்படுத்தாதே!!.சொன்னவர் அறிஞர் அண்ணா அவர்கள். ஆனால்,  அந்த அண்ணாவின் பெயரை கொண்ட கட்சியை நடத்தும் ஜெயலலிதாவோ நீதிமன்ற கண்டிப்புக்கு அதிகமாக ஆளான முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார் . நீதியையும் ,நியாயத்தையும் குழி தோண்டி புதைப்பதே அவருடைய கொள்கையாக கொண்டுள்ளார். தனது பேச்சால், செயலால் யார் காயப்பட்டாலும், எத்தனை பேர் துன்பப்பட்டாலும் அது பற்றி கொஞ்சமும் கவலைபடாத ஒருவர் ஜெயலலிதா. பல தருணங்களில் மனிதநேயம் மறந்து பேசுகிற, செயல்படுகிற ஜெயலலிதாவை சிலர் துணிச்சல்காரர் என்று போற்றுகின்றனர். ஆதிக்க வெறியை  துணிச்சல் என்று கூறினால், மகாத்மா காந்தியை  கொன்ற கோட்சேவையும்  துணிச்சல்காரன் என்று சொல்லலாமே    

No comments:

Post a Comment