எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் - 6
90 வயது கலைஞர் 50 வயது கலைஞரை ப் போல்.......
அவசர நிலை மிசா கொடுமையை மிக உறுதியாக எதிர்த்த கலைஞரா, தம் சொந்தக் கட்சி விவகாரத்தில் இவ்வளவு தடுமாறுகிறார் என்று நண்பர் ஒருவர் கேட்டார். 90 வயது கலைஞர் 50 வயது கலைஞரப் போல் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்களை யாரும் எப்போதும் எந்த வகையிலும் திருப்தி செய்ய முடியாதுதான். ஆனால் மாறி விட்ட குடும்ப உறவுகளையும், உணர் வுகளை மாற்றிக் கொண்ட இயக்கத்தின் அடுத்த கட்ட தலைவர்களையும் தவிர்த்துவிட்டு கலைஞரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்பது காலம் ஏற்படுத்திய மாற்றமே அன்றி, கலைஞரிடம் ஏற்பட்ட மாற்றமன்று.
1) 14 வயதினில் "ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள்;நீ தேடி வந்த கோழைகள் வாழும் நாடு இதல்லவே" என தமிழ் முழக்கம் திருவாரூரில் முழங்கியவர்...
2) திருமண நாளன்று மணக்கோலத்தோடு இந்தி எதிர்ப்பு முழக்கம் முழங்கியவர்...
3) 20 வயதினில் "முரசொலி" பத்திரிகை கையேடு துவங்கிய பத்திரிகை ஆசிரியர்...
4) சமஸ்கிருத வார்த்தைகளால் நிறைந்து கிடந்த தமிழ் திரையுலகில் சமூக நீதி கருத்துக்களை அழகு தமிழ் வசனம் எழுதி மொத்த மக்களையும் தன பக்கம் பார்க்க செய்த "பரா சக்தி" அவர்
5) தனது பேச்சாற்றலால் மாணவர்களை கெடுக்கிறார்..போராட்ட உணர்வை தூண்டுகிறாரென இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைது....தனிமை சிறையில் அடைப்பு -பாளையம்கோட்டையில்...
6) மனைவி இறந்துவிட்டார் என செய்தி வந்த பின்னரும் புதுக்கோட்டை கட்சி பொதுகூட்டத்தில் குறித்தபடி பேசி முடித்து விட்டு.. பிறகு மனைவியின் சடலம் காண சென்ற இயக்கத்தின் மீது பற்று கொண்ட பற்றாளர்..
7) "கல்லக்குடி". என ரயில் நிலைய பெயர் மாற்றம் கோரி தண்டவாளத்தில் தலை வைத்து வடஇந்திய நுழைவுக்கு சாவுமணி அடித்த சீற்றமான இளைஞர்...
8) "இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்" என ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்படுகிறது என்றவுடன் நெருக்கடி காலத்தில் தைரியமாக எதிர் குரல் எழுப்பிய ஜனநாயக காவலன்..
9) பெருந்தலைவரை கைது செய்யமாட்டேன்...அதற்காக ஆட்சியையும் இழக்க தயாரென முழங்கிய வேகம்...
10) இலங்கையில் தமிழர்களை கொன்றுவிட்டு திரும்பும் IPKF என்னும் இந்திய அமைதி படையை முதல்வர் என்னும் முறையில் வரவேற்க செல்ல மாட்டேன் என பிரதமரின் எச்சரிக்கைக்கே எச்சரிக்கை கொடுத்த அந்த இன உணர்வு...
11)திருச்சியில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநாட்டில் மாலை 5 மணிமுதல் மறுநாள் விடியற்காலை 4 மணி வரை ஒரே இடத்தில் மேடையில் அமர்ந்தபடியே ஊர்வலத்தில் சென்ற தொண்டர்களை கை அசைத்து உற்சாகப்படுத்திய அந்த ஈடுபாடு...
12) எந்த அரசு பதவியும் வகிக்காத தந்தை பெரியாருக்கு, இறுதி மரியாதைக்கு ராணுவ அணிவகுப்பை அளித்த விவேகம்...
13) விடுதலை நாளன்று நாட்டுக்கொடியை அம்மாநில முதல்வரே ஏற்ற வேண்டுமென போராடி பெற்ற உரிமை...
என எத்தனையோ கலைஞர் அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்..
இப்படி அவர் தனது வாழ்நாளில் படிப்படியாக சேர்த்து வைத்த பெருமைகளையும் நற்பெயரையும் சிலர் தங்களது தவறுகளுக்காக சீரழிக்க முனைந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் ...
கலைஞரது குடும்பத்தினராகவே இருந்தாலும்
அவர்களுக்கு எதிராகவே நமது பதிவுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களில் நானும் ஒருவன் ..
இன்னொரு செய்தியையும் இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கலைஞருக்குத்தான் வயது தொண்ணூறு ஆகிவிட்டது. அவரால் உறுதியாக செயல்பட முடியவில்லை என்கிறார்கள். இன்று இளம் தலைவர்களாக வலம் வருகிறர்வர்கள் எல்லோரும் மன உறுதியோடும் கொள்கை உறுதியோடும் இருக்கிறார்களா?
இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற முழக்கத்தொடு கட்சி நடத்துகிற இளந்தலைவர்கள் எத்தனை அந்தர் பல்டிகளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இருப்பாய் தமிழா நெருப்பாய் என்று பாடிய கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளுக்கு பேராசிரியர் சுபவீ அவர்கள் ஒரு முறை அருமையான் விளக்கத்தைத் தந்தார்கள்
இருப்பாய் தமிழா நெருப்பாய்! உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் புகழ்பெற்ற இவ்வரி என்ன சொல்கிறது? நெருப்பாய் இருப்பது என்றால் எப்படி?
நெருப்புக்குப் பல குணங்கள் உண்டு. எனினும், சட்டென்று நினைவுக்கு வருவது, நெருப்பு சுடும் என்பதுதான். எனவே, நெருப்பாய் இரு என்றால், தமிழா நீ சூடு, சுரணை உள்ளவனாக இரு என்று பொருள். தமிழனுக்குச் சூடே கிடையாதா, அவனுக்குக் கோபமே வராதா என்று கேட்டால், அப்படிச் சொல்லிவிட முடியாது. தன் சாதியைப் பற்றி யாராவது இழிவாகக் கூறிவிட்டால், தமிழன் கோபக் கனலாகி விடுகிறான். அவனிடம் சூடு பறக்கிறது. ஆனால், நம் மொழி, இனம் பற்றி எவரேனும் இழிவாய்ப் பேசினால், நாம் ஆறிய சோறாய் அடங்கிப் போகிறோம். அங்கேதான் நெருப்பாய் இருக்க வேண்டும் என்கிறார் கவிஞர்.
நெருப்புக்குப் பல குணங்கள் உண்டு. எனினும், சட்டென்று நினைவுக்கு வருவது, நெருப்பு சுடும் என்பதுதான். எனவே, நெருப்பாய் இரு என்றால், தமிழா நீ சூடு, சுரணை உள்ளவனாக இரு என்று பொருள். தமிழனுக்குச் சூடே கிடையாதா, அவனுக்குக் கோபமே வராதா என்று கேட்டால், அப்படிச் சொல்லிவிட முடியாது. தன் சாதியைப் பற்றி யாராவது இழிவாகக் கூறிவிட்டால், தமிழன் கோபக் கனலாகி விடுகிறான். அவனிடம் சூடு பறக்கிறது. ஆனால், நம் மொழி, இனம் பற்றி எவரேனும் இழிவாய்ப் பேசினால், நாம் ஆறிய சோறாய் அடங்கிப் போகிறோம். அங்கேதான் நெருப்பாய் இருக்க வேண்டும் என்கிறார் கவிஞர்.
நெருப்புக்கு இன்னொரு குணமும் உண்டு, தீச்சுடரை நாம் எப்படி ஏந்தினாலும்
- நேராக, பக்கவாட்டில்,
தலைகீழாக எப்படி ஏந்தினாலும் - நெருப்பு மேல் நோக்கித்தான் எழும். தஞ்சாவூர் பொம்மையைத் தலையாட்டி பொம்மை என்று நாம் தவறாகச் சொல்கின் றோம். அது தலையாட்டி பொம்மை அன்று. எப்படி நாம் சாய்த்து வைத்தாலும், உடனே தலைநிமிர்ந்து
விடுகிற தலை தாழாப் பொம்மை அது! அது நெருப்பின் குணம். எனவே, நெருப்பாய் இரு என்றால், என்றும் தலை வணங்காத சுயமரியாதைக்காரனாக இரு என்றும் பொருள்.மேலும், நெருப்பு என்றால் வெளிச்சம். அதாவது அறிவு. அறியாமை இருள் நீக்கும் அறிவு. அதனால்தான் அறிவின் அடையா ளமாய், சுடரேந்தி நிற்கும் ஒரு கையை நாம் பயன்படுத்துகிறோம்.
எனவே, இருப்பாய் தமிழா நெருப்பாய் என்று கவிஞர் ஏன் பாடினார்? தமிழர்கள் இன, மொழி உணர்வுடையவர்களாகவும், சுயமரி யாதைக்காரர்களாகவும், அறிவாளிகளாகவும்
இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காகத்தான்!
(கலைஞர் தொலைக்காட்சியின்
ஒன்றே சொல், நன்றே சொல் பகுதியில் - சுப.வீரபாண்டியன்)கலைஞரால் உறுதியாக செயல்பட முடியவில்லை என்று சொல்பவர்கள் மற்ற தலைவர்களையும் கொஞ்சம் கவனித்துவிட்டு பேசினால் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment