எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் 7
வெகு நாட்களாக இலக்கியத்தில் ஒரு அய்யம். பலரைக் கேட்டும் பதில் சரியாக கிடைக்கவில்லை. சில நூல்களிலும் தேடிப் பார்த்தேன். விளக்கம் ஏதும் காணமுடியவில்லை. பிறகுதான் புரிந்தது என்னைப் போலவே பலரும் அதே சந்தேகத் தாகத்தோடு திரிகிறார்கள் என்று. வேறு ஒன்றுமில்லை. நவீனத்துவ இலக்கியங்கள் என்றால் என்ன என்பதை ஓரளவு (கண்டிப்பாக ஓரளவுதான் ) கல்லூரி காலத்திலேயே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்த பின் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று சிலர் சொல்கிறார்களே; அப்படி என்றால் என்ன என்றுதான் இதுவரை எனக்கு விளங்கவில்லை. அண்மையில் ஒருவர் இணையத்தில் பின் நவீனத்துவம் குறித்து எழுதியிருந்ததை படித்த பிறகுதான் ஒரு ஆறுதல். பின் நவீனத்துவம் தெரியாத நீயெல்லாம் ஒரு இலக்கியவாதியா என்று யாரும் நம்மை கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. நம்மைப் போலவே பின் நவீனத்துவம் பற்றி தெரியாதவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதை புரிந்து கொண்டதால் மட்டுமன்று, பின் நவீனத்துவ இலக்கியவாதிகள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்கிறவர்களுக்கே அதற்கு விளக்கம் சொல்லத் தெரியாது என்ற உண்மையை புரிந்து கொண்டதாலும்தான் அந்த நம்பிக்கை. இதோ இணையத்தில் நான் படித்த அந்தப் பதிவு
பின்நவீனத்துவம் என்றால் என்ன?

ஜிகர்தண்டா ஒரு பின்நவீனத்துவப் படம்’ என்று சாரு புகழாரம் சூட்டியதிலிருந்து மீண்டும் பின்நவீனத்துவம்
இணையத்தில் கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
பிரச்சினை என்னவென்றால் பின்நவீனத்துவம் என்றால் என்னவென்று புரியாமல் பேந்த பேந்த முழித்துக்கொண்டு பாதிபேரும், தாங்கள் புரிந்துகொண்ட பின்நவீனத்துவம்
என்னவென்பதை விளக்க முடியாமல் மீதி பேருமாக வாழக்கூடிய பின்நவீனத்துவச் சூழலில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் இலக்கியவாதிகள் ஒவ்வொருவராக என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தபோதே தமிழில் சிற்றிலக்கிய சமாச்சாரமாக இருந்த பின்நவீனத்துவம், வெகுஜன கலாச்சாரத்தின்
கச்சாப்பொருளாக ஆகிவிட்டது. ஒரு படமோ, கதையோ, கட்டுரையோ பிடித்துவிட்டால் அதில் பின்நவீனத்துவ அம்சங்கள் இருப்பதாக போகிறபோக்கில் ஆள் ஆளுக்கு அடித்துவிட்டு போக ஆரம்பித்துவிட்டார்கள்.
ஜிகர்தண்டாவை பின்நவீனத்துவ
திரைப்படம் என்று சாருவை அடியொற்றி சொல்லியிருக்கும்
நண்பர் ஒருவர், பின்நவீனத்துவத்தை விளக்க முடியாது, உணரத்தான் முடியுமென்று
ஒரு போடு போட்டிருக்கிறார். கடவுள் ரேஞ்சுக்கு ஆகிவிட்டது பின்நவீனத்துவம்.
பின்நவீனத்துவம்
என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் எல்லோரும் பின்நவீனத்துவம் என்கிற வார்த்தையை சகட்டு மேனிக்கு பயன்படுத்துகிறார்கள். யாரையாவது விளக்கம் கேட்டால் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் அல்லது ‘தம்பி, அது தேவரகசியம்’ ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.
அப்படியெனில்
பின்நவீனத்துவம் என்பது அவ்ளோ பெரிய அப்பாடக்கரா
என்று நினைத்துக் கொண்டு, அது என்னவென்ற தெளிவு இல்லாமலேயே கும்பலில் கோவிந்தாவாக பின்நவீனத்துவத்துக்கு ஜே போட்டாக வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் ஏற்பட்டு விட்டது.
பின்நவீனத்துவத்தின் கோட்பாடு, தத்துவம், லொட்டு லொசுக்கையெல்லாம் விட்டுவிடுவோம்.
பின்நவீனத்துவம் என்பது ஒரு காலக்கட்டத்தின் சூழல். அதாவது கி.மு / கி.பி மாதிரி. அதிமுக ஆட்சிக்காலம் / திமுக ஆட்சிக்காலம் மாதிரி. அடிப்படையில்
இந்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டால் போதும். அதாவது நவீனத்துவத்தை கி.மு. என்று எடுத்துக் கொண்டால் பின்நவீனத்துவத்தை கி.பி. என்று எடுத்துக் கொள்ளலாம். மொத்த மேட்டரே இவ்வளவுதான்.
மனுஷன் மாடர்ன் ஆன காலம் நவீனத்துவம்.
மாடர்ன் ஆன மனுஷன் மறுபடியும் மாடர்ன் அம்சங்களை கேள்விக்குள்ளாக்கி எல்லாத்தையும் கலைத்துப் போட்டு விளையாடுவது போஸ்ட் மாடர்ன், அதாவது பின்நவீனத்துவம். தட்ஸ் ஆல். ஆர்வமிருப்பவர்கள் மேலதிகமாக பின்நவீனத்துவத்தின் கோட்பாடு, கோட்பாட்டாளர்கள், பண்பு என்றெல்லாம் வாசித்துக் கொள்ளலாம். ஆர்வமில்லாதவர்கள் அப்படியொரு மேட்டரைப் பற்றி கவலைப்பட வேண்டியதேயில்லை. நமக்கு கலைஞர் ஆண்டாலும், ஜெ. ஆண்டாலும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்ன. மரக்கட்டை மாதிரிதானே வாழ்கிறோம். பின்நவீனத்துவ விஷயத்திலும் அப்படியே இருந்துவிட்டுப் போவோம். இதுவும்கூட பின்நவீனத்துவத்தின் ஒரு பண்புதான்.
இனிமேல் நம்மூர் இலக்கியவாதிகளிடமோ / அறிவுஜீவிகளிடமோ
பின்நவீனத்துவம் பற்றி கேட்காதீர்கள். பெரும்பாலும் அவர்களுக்கு
தெரிந்திருக்காது. அல்லது தெரிந்தது மாதிரி சொல்வது நமக்கு பிரயோஜனமாக இருக்காது., மாடர்ன் ஆன மனுஷன் மறுபடியும் மாடர்ன் அம்சங்களை கேள்விக்குள்ளாக்கி எல்லாத்தையும் கலைத்துப் போட்டு விளையாடுவது போஸ்ட் மாடர்ன், அதாவது பின்நவீனத்துவம். தட்ஸ் ஆல். ஆர்வமிருப்பவர்கள் மேலதிகமாக பின்நவீனத்துவத்தின் கோட்பாடு, கோட்பாட்டாளர்கள், பண்பு என்றெல்லாம் வாசித்துக் கொள்ளலாம். ஆர்வமில்லாதவர்கள் அப்படியொரு மேட்டரைப் பற்றி கவலைப்பட வேண்டியதேயில்லை. நமக்கு கலைஞர் ஆண்டாலும், ஜெ. ஆண்டாலும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்ன. மரக்கட்டை மாதிரிதானே வாழ்கிறோம். பின்நவீனத்துவ விஷயத்திலும் அப்படியே இருந்துவிட்டுப் போவோம். இதுவும்கூட பின்நவீனத்துவத்தின் ஒரு பண்புதான்.