கலைஞரே எனக்கு ஆசிரியர்
இன்று ( 20 / 08 / 2010 ) எனது 57 வது பிறந்த நாள். தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எனது நெடுநாளைய விருப்பத்தை இன்று செய்யத் தொடங்குகிறேன். சொந்த ஊரான நெல்லை ஏர்வாடி, அரசியல் கூட்டங்களுக்கு பிரபலமாக இருந்த ஊர். எங்கள் ஊரில் சிறு வயதில் என்னைக் கவர்ந்த இடம் எங்கள் தெருவில் ( 6 வது தெருவில்) உள்ள மீலாது மைதானம். அங்கேதான் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். ஒலிபெருக்கிகளில் ஒலித்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகளும், இனமுரசு நாகூர் இ. எம். அனிபா அவர்களின் இயக்கப் பாடல்களும் இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பள்ளியில் படிக்கும்போதே எங்கள் ஊரின் பிரபல மேடை பேச்சாளர்கள் திரு. ஆ. மீ. அலிசேக் மன்சூர், திரு. என். பி. எம். அப்துல்காதர், திரு. 'கோடையிடி' காஜா, திரு. மஸ்த்தான், திரு. அனிபா போன்றோரின் மேடைப் பேச்சுகளையும் கேட்டு பேச்சாளனாக வேண்டும் என்ற விருப்பம் துளிர்த்தது. அதன் விளைவால் ஆறாம் வகுப்பு முதல் பள்ளியில் நடைபெற்ற அனைத்துப் பேச்சுப் போட்டிகளிலும் பங்கு பெற்றேன். முதல் பரிசு என்று இல்லாவிட்டாலும் ஏதேனும் ஒரு பரிசு கிடைத்து விடும்.
எனது அருமை நண்பர், இன்றைய மும்பைப் புறநகர் திமுக நிர்வாகிகளில் ஒருவரும் எங்கள் ஊரின் தி. மு. கழகக் காவலராக இன்றும் திகழும் திருமிகு. ஆ. மீ. அலிசேக் மன்சூர் அவர்களின் மைந்தனுமான தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. அலிசேக் மீரான் எனது பள்ளித் தோழர். என்னைவிட ஒரு ஆண்டு இளையவர். பள்ளியில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளின் முதல் பரிசுகளை அள்ளிக்கொண்டு போய்விடுவார்.
ஆறாம் வகுப்பில் ஒருமுறை பாரதியார் பற்றிய பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு மேடை ஏறியதும், உடுத்திருந்த லுங்கி ( அப்போதெல்லாம் மாணவர்கள் பலரும் லுங்கி அணிந்துதான் பள்ளிக்குப் போவோம், எங்கள் ஊரில் லுங்கியை 'சாரம்' என்றும், 'கைலி' என்றும் அழைப்பார்கள்) அவிழ்ந்து விட, உடுக்கை இழந்தவன் கை தனது பணியை மிகச் சரியாக செய்தும், மாணவர்களும் பிற பார்வையாளர்களும் 'கொல்' என்று சிரித்து விட்டார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் மனப்பாடம் செய்திருந்ததை முழுவதும் பேசிவிட்டுத்தான் கீழே இறங்கினேன். கிழே இறங்கி வந்ததும் விழாவுக்கு வருகை தந்திருந்த
திரு என். பி. எம். அப்துல்காதர் என்னைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். அப்போது அவர் சொன்னதுதான் பேச்சாளனாக மட்டுமல்ல எழுத்தாளனாகவும் வரவேண்டும் என்ற என்ணத்தை எனக்குள் விதைத்தது.
இன்றைய தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் என் உள்ளத்தில் இடத்தைப் பிடித்தது அன்றுதான்.
"மீரா சாகிப்" (என்னுடைய முழுப் பெயர் முகைதீன் மீரா சாகிப்) என்று அழைத்து அவர் சொன்னார் "நீ பேசும்போது உனது பல்வரிசை கலைஞர் பல் வரிசையைப் போல் இருக்கிறது" என்று. அந்த நிமிடமே நான் என்னைக் கலைஞராகவே நினைத்துக் கொண்டேன். கலைஞரைப் பற்றி அந்த சிறு வயதில் உனக்கு என்ன தெரியும் என்று கேட்டு விடாதீர்கள். எங்கள் ஊரே தி. மு. க. வின் கோட்டையாக இருந்த நேரம். அண்ணாவைப் போல், கலைஞரைப்போல் பேசிக்காட்டுவதுதான் என்னைப் போன்ற சிறுவர்களின் அன்றைய பொழுது போக்காக இருந்தது. பேசுவதில் ஆர்வம் இல்லாதவர்கள் எம். ஜி. ஆரைப் போல வாள் வீசிக் காட்டுவார்கள், அல்லது நடித்துக் காட்டுவார்கள். இன்றைய தாய்மார்கள் குழந்தைகள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு மகிழ்கிறார்கள்; அன்றைய தாய்மார்கள் குழந்தைகள் தலைவர்களைப் போல பேசிககாட்டுவதை கேட்டு மகிழ்ந்தார்கள்.
திரு. என். பி. எம். அவர்கள் வீட்டில் திராவிட இயக்க இதழ்கள் ஏராளமாக வந்து குவிந்து கிடக்கும். அவற்றில் வெளியிடப் பட்டிருக்கும் அண்ணாவின் பேச்சு , கலைஞரின் பேச்சு, அல்லது அவர்கள் எழுதிய கட்டுரைகள் போன்றவற்றை அவர்கள் குரலிலேயே சத்தமாக படித்துக் காட்டுவோம். நாங்கள் படித்தது எப்படி இருந்தாலும் திரு. என். பி. எம் கைதட்டி பாராட்டுவார். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் வீடு என். பி. எம். அவர்கள் வீட்டுக்கு மிக அருகில் இருந்ததால் பெரும்பாலான நேரம் அவருடைய வீட்டில்தான் பொழுதைக் கழித்து வந்தோம். மாணவர்களிடம் அவர் இனிமையாகப் பழகக் கூடியவர். அதனால் அவரோடு மாணவர் கூட்டம் ஒன்று எப்போதும் இருக்கும். அவரை 'நெல்லைக் கலைஞர்' என்றுதான் பலர் அழைப்பார்கள். அவர் வீட்டு வாசலிலேயே சில நேரங்களில் கலைஞர் எழுதிய மனோகரா, பராசக்தி வசனங்களைப் பேசி நடிப்பதுண்டு . கலைஞரின் நாடகங்களுக்கும் திரைப்பட வசனங்களுக்கும் அப்போது பள்ளிக் கூடத்திலும் அனுமதி
கிடைத்தது. அப்போதே சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்று ஊர், உலகத்தால் போற்றப்பட்ட கலைஞரின் பல்வரிசையைப் போன்று என் பல்வரிசை இருக்கிறது என்று சொல்லக் கேட்டதாலேயே பெருமை கொண்டு, கலைஞரின் வசனங்களை, எழுத்துகளை, சொற்பொழிவுகளை தேடித்தேடிப் படித்து, நானும் கலைஞரைப் போல சிறந்த பேச்சாளனாக, எழுத்தாளனாக வரவேண்டும் என்ற எண்ணம் அப்போதே என்னுள் எழுந்துவிட்டது. பெரியாரும் அண்ணாவும் என் சிந்தனைக்குள் வருவதற்கு முன்னதாகவே கலைஞர் வந்து விட்டார். அதற்கு அந்த ஒரு நிகழ்வுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அன்றுமுதல் இன்றுவரை எனது கலை, இலக்கிய, அரசியல் தளத்தில் கலைஞரே எனக்கு ஆசிரியர்.
இப்போது நான் பேசத்தெரிந்து கொண்டேன், ஆனால் பேச்சாளன் ஆகிவிட்டேனா? என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நான் எழுதத் தெரிந்து கொண்டேன், ஆனால் எழுத்தாளன் ஆகிவிட்டேனா? என்று எனக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, தொடர்ந்து எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன் (தொடரும்)

No comments:
Post a Comment